|
|
உருளைக்கிழங்கை விளைய வைக்கும் விவசாயியை விட, வறுத்து விற்கும் வியாபாரியே அதிக லாபம் அடைகின்றார்: ராகுல் காந்தி
|
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசியதாவது:-
விவசாயிகளின் நலனைப் பற்றி பா.ஜ.க. கவலைப்படவில்லை. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூட சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது பற்றி கூறப்பட்டிருந்தது. ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. நாங்கள் அனுமதித்த போது பாராளுமன்றத்தில் பா.ஜ.க.எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாங்கள் ஏன் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தோம் தெரியுமா? இதன் மூலம் விவசாயிகள், தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையை பெற முடியும். இதை நாங்கள் அனுமதிக்காதிருந்தால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ உருளைக் கிழங்குக்கு விவசாயி பெறும் விலையும், ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் விலையும் ஒன்றாக உள்ளது. உருளைக்கிழங்கை விளைய வைக்கும் விவசாயியை விட, அதை சிப்ஸ் ஆக தயாரித்து விற்பவர்கள் மிகஅதிக லாபம் சம்பாதிக்கின்றார்கள்.
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு நுழைந்தால், இந்த நிலை மாறும். விவாசய விளைபொருட்களுக்கான நல்ல விலையை விவசாயிகள் பெற முடியும். இதற்காக தான் அன்னிய முதலீட்டுக்கு நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். |
காங்கிரசை கலைக்க வேண்டும் என்ற காந்தியின் ஆசையை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார்: மோடி கிண்டல் |
குஜராத் மாநில சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட தேர்தல் நாளை (13-ம் தேதி) நடைபெறுகின்றது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இறுதி கட்ட பிரசாரம் நேற்று ஓய்ந்தது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இந்த தொகுதிகளில் பேசிய ராகுல் காந்தி, ‘குஜராத் மாநிலம் என் அரசியல் ஆசான்
காந்தி பிறந்த பூமி என்பதை நரேந்திர மோடி நினைவில் கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய நரேந்திர மோடி, ‘காந்தியின் பாதையை கடைபிடிப்பதாக ராகுல் காந்தி கூறி வருகின்றார். சுதந்திரத்துக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட வேண்டும் என்று காந்தி விரும்பினார்.
அவரது விருப்பத்தை ராகுல் காந்தி நிச்சயமாக நிறைவேற்றி விடுவார்’ என்று கூறினார். |
-சி. அரவிந்தன். |
|