தெலுங்கானா ஆதரவு வக்கீலான நரேஷ் குமார் என்பவர் தனித்தெலுங்கானா மாநிலத்தை பிரித்து தருவோம் என்று ஆந்திர மக்களுக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற தவறிய மந்திய மந்திரிகள் சுஷில்குமார் ஷிண்டே, ப.சிதம்பரம் ஆகியோர் மீது இ.பி.கோ. 420-வது சட்டப் பிரிவின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ரங்கா ரெட்டி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மந்திரிகள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும் வழக்குப் பதிவு செய்யாத போலீசாருக்கு கோர்ட் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், ஐதராபாத்தின் புறநகர் பகுதியான எல்.பி.நகர் போலீஸ் நிலையத்தில் மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் உள்துறை மந்திரியும் தற்போதைய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஆகியோர் மீது இன்று இ.பி.கோ.420 சட்டப்பிரிவின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.