தமிழக அரசுசுப்ரீம் கோர்ட்டில் இன்று (25.06.2013) ஒரு மனுதாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. அங்குள்ள அணைகளில் 26 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால் நதி நீர் பங்கீட்டு அடைப்படையில் தமிழகத்துக்கு உடனே 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்குமுறை குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.