இந்து முன்னணி நிர்வாகி கொலை: தொண்டர்கள் சாலை மறியல்!

VELLAIYAPPANvllaiyappan mourderDSCN0265தமிழக இந்து முன்னணி மாநில அமைப்பு செயலாளராக இருந்தவர் வெள்ளையப்பன். இவர் வேலூர் மாவட்டம் அண்ணாநகர் முத்து மண்டபம் அருகே 01.07.2013 மாலை மர்ம மனிதர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

அவரை வெட்டிக்கொன்ற மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை வேலூர் போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்து முன்னணியின் பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியன் திருப்பூரில் இத்தகவலை தெரிவித்தார்.இதனையடுத்து 01.07.2013  இரவு தொட்டியம் பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் மறியலில் ஈடுப்பட்டனர்.

-பு.மோகன்ராஜ்

Leave a Reply