இலங்கையில் மாலைதீவு ஜனாதிபதி !

Mala President Waheed meets Sri Lankan Presidentமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியும் அவரது பாரியரும் 05.07.2013 இலங்கையை வந்தடைந்தனர். மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் வாஹிட் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், வர்த்தக பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். அத்துடன் இலங்கை பிரதமர் உள்ளிட்ட  இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் அவர் சந்திக்க உள்ளார்.   

இந்நிலையில் இன்று (06.07.2013) காலை அலரி மாளிகையில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்த மாலைத்தீவு ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

 

 

Leave a Reply