மலேசியா இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடினின் வீடு கொள்ளையிடப்பட்டது. 06.07.2013 (சனிக்கிழமை) பட்டப்பகலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
முன்னதாக ஜாலான், செத்தியாபிஸ்தாரி, புக்கிட் டாமான்சாராவில் உள்ள அவரது இல்லத்தில் 3 கொள்ளையர்கள் முன்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
சம்பவத்தின் போது, பணிப்பெண் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார். கொள்ளையர்கள் மூன்று பெரிய பைகளில் மடிக்கணினி, விலைமதிப்புள்ள கைக்கடிகாரங்கள் மற்றும் இதர பொருள்களை கொள்ளையிட்டுத் தப்பினர்.
“அமைச்சர் வீட்டிலேயே, திருடர்கள் கொள்ளையிட்டுள்ளது, நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. இவ்விவகாரத்தை நான் போலீசிடமே விட்டு விடுகிறேன்” என மலேசியா அமைச்சர் கைரி தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.