திருச்சி மாவட்டம், திருவெரும்பூர் ஒன்றியம், ஒட்டக்குடி கிராமத்தில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பவரின் மகன் ப.ரமேஷ் இவர் கீழமுல்லக்குடி ஊராட்சி மன்றத்தலைவராக இருந்து வருகிறார். இவர் தி.மு.க கட்சியை சேர்ந்தவர் இன்று(10.07.2013) மாலை 04.00 மணியளவில் ப.ரமேஷ் தனக்கு சொந்தமான தென்னந்தோப்பு தோட்டத்திலிருந்து மோட்டார் பைக்கில் வந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதனால் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
– கோ.லெக்ஷ்மிநாராயணன்