நரேந்திர மோடி ரகசிய ஆலோசனை !

modi பூரி ஜகநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக ஒடிசா மாநிலம் சென்ற குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, குஜராத் திரும்பும் வழியில் 16.07.2013 இரவு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் வந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை மோடி நேன்றுதான் முதன்முறையாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்பூர் விமான நிலையத்தில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நேராக ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் சென்ற மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி ஆகியோருடன் தனி அறையில் சுமார் 2 1/2 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு, நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மும்பையில் இருந்து விமானம் மூலம் நாக்பூர் வந்த பா.ஜ.க. முன்னாள் தலைவர் நிதின் கட்காரி மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசிவிட்டு தனது வீட்டிற்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

பின்னர், நாக்பூர் விமான நிலையம் வந்த மோடியை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக் கொண்டனர். அவர்களுக்கு பேட்டியளிப்பதை தவிர்த்த மோடி, தனி விமானம் மூலம் அகமதாபாத் சென்றடைந்தார்.

 

Leave a Reply