திருச்சிராப்பள்ளி மாவட்டம், குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கரூர் வழியாக திருச்சிராப்பள்ளி நோக்கி சென்ற ரயிலில் 16/07/2013 அன்று காலை 10:35 மணியளவில் 65 வயது மதிக்க தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அடிபட்டு உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
– பன்னீர்