அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்!

C. Perumalசேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக இருந்து வந்தவர் பெருமாள் (வயது63). நேற்று (17.07.2013) இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு சேலத்தில் உள்ள தனது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா வீட்டுக்கு சென்று பேரக்குழந்தைகளை பார்த்தார். பின்னர் அவர் வாழப்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

இன்று (18.07.2013) அதிகாலை 4.45 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை காரில் சேலம் கோகுலம் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் பெருமாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார். இதுப்பற்றி தெரிய வந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.  எம்.எல்.ஏ.வின் உடல் ஆம்புலன்சு மூலம் அவரது சொந்த ஊரான ஆத்தூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

Leave a Reply