கோடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

 pr120813b

கோடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார். முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஜூன் மாதம் 28-ந்தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடுக்கு சென்றார். அங்கிருந்தபடியே முதலமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை செவ்வனே கவனித்து வந்தார்.

அவ்வப்போது தமிழக அரசு தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முக்கியப் பிரச்சினைகளில் உடனுக்குடன் முடிவு எடுத்து செயல்படுத்தினார். 44 நாட்களுக்குப் பிறகு கோடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கோடநாடு இல்லத்தில் இருந்து பகல் 12.05 மணிக்கு காரில் புறப்பட்டு ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் 12.55 மணிக்கு புறப்பட்டு கோவை விமான நிலையத்திற்கு 1.25 மணிக்கு வந்தார். பின்னர் தனி விமானத்தில் 1.45 மணிக்கு சென்னை புறப்பட்டார்.

சென்னை விமான நிலையத்திற்கு பகல் 2.40 மணிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கார் மூலம் போயஸ் தோட்ட இல்லத்திற்கு 3.10 மணிக்கு வந்து சேர்ந்தார்.  

போயஸ் தோட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வந்தபோது, அங்கு திரளாகக் கூடியிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் குறிப்பாக மகளிர் அணியினர் ’அம்மா வாழ்க’ என்று பலமாக வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

அவர்கள் அருகில் முதலமைச்சரின் கார் வந்து நின்றது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மகளிர் அணியினரிடம் இருந்து பூங்கொத்து பெற்றுக்கொண்டார். அதையடுத்து கார் போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்றது. முதலமைச்சர் வருகையையட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து போயஸ் தோட்டம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

Leave a Reply