எமது இனிய சுதந்திரத் தின நல்வாழ்த்துக்கள்!

Independence-day

எமது இலட்சியப் பயணம்…!

 

ஒரு கோடி துன்பங்கள் எமைச் சூழ்ந்த போதிலும்

ஒருபோதும் கலங்கமாட்டோம்!

 

பொருள் கோடி தந்தாலும் புகழ்தேடி வந்தாலும்

பொய்வாழ்வு வாழமாட்டோம்!

 

கதியில்லா ஏழைகள் கண்ணீரில் குளிக்கையில்

கை கட்டி நிற்கமாட்டோம்!

 

விதியென்ற பெயராலே கொடுமைகள் நடக்கையில் வேடிக்கைப் பார்க்க மாட்டோம்!

 

துப்பாக்கித் தோட்டாக்கள் எம் நெஞ்சை

துளைத்திட்ட போதிலும் தூரவே ஓடமாட்டோம்!

 

பாட்டாளி மக்களின் படைவீரனாகுவோம்

பயந்து அஞ்சி நடுங்க மாட்டோம்!

 

உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை மக்களை வணங்குவோம் எவரையும் வணங்க மாட்டோம்!

 

ஏழ்மையில் வாடுகின்ற குழந்தையைப் பாடுவோம்

எவரையும் துதிப்பாட மாட்டோம்!

 

எரிகின்ற தீயிலே எம் உடல் வீழ்ந்தாலும்

இலட்சியம் மாறமாட்டோம்,  சத்தியம் தவறமாட்டோம்!

 

எழில் மலராய் மக்கள் இதயத்தில் வாழ்வோம்- நாங்கள் செயல் வடிவில் என்றுமே சாகமாட்டோம்!

       

 என்றும் தோழமையுடன்,

டாக்டர்.  துரை பெஞ்சமின்

ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்

 

Leave a Reply