குடும்ப வன்முறையைக் கையாள போலீசுக்கு பயிற்சி தேவை!

siமலேசியாவில் 9,983 குடும்ப வன்முறை சம்பவங்களில் 817 மட்டுமே நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து குடும்ப வன்முறை விவகாரத்தில் போலீஸ் படைக்குப் போதுமான தேர்ச்சி இல்லை என்பது தெளிவாகிறது என டிஏபி-இன் புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம் கூறினார்.

எனவே, மகளிருக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளைக் கையாள்வதற்கு போலீசுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார்.

“குடும்ப வன்முறை என்பது ஒரு தனிப்பட்ட விவகாரம் அன்று என்பதைச் சமுதாயமும் அரசாங்கமும் போலீசும் உணர வேண்டும்”. அதுவும் ஒரு குற்றச்செயல்தான் என சிம் ஓர் அறிக்கையில் கூறினார்.

 

Leave a Reply