மலேசியாவில் ஈப்போ, மகிழம்புவைச் சேர்ந்த 5 வயது சிறுமியை தாக்கி துன்புறுத்திய அதன் பெற்றோர்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர். தற்போது அக்குழந்தை ஈப்போ ராஜா பெர்மைசூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16.08.2013 அதிகாலை சம்பந்தப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் அச்சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அச்சிறுமியைச் சோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடல் முழுக்க அடித்த தழும்பு இருந்ததைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் சம்பந்தப்பட்ட சிறுமி சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டது தொடர்பாக அப்பெற்றோரை காவல்நிலையத்திற்கு அழைத்த போலீசார் தற்போது அவ்விருவரையும் மூன்று நாட்களுக்கு விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.