சென்னையில் 15.08.2013 நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கச்சதீவில் தமிழகத்திக்குள்ள உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய சுதந்திர தினத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக வெளியிட்டுள்ள கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் சிங்கள பெளத்த இனவாதி நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தொடர்ந்து இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழக முதலமைச்சரின் கருத்துக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தாதது சம்பந்தமாக ஜாதிக ஹெல உறுமய கவலையடைகிறது.
இலங்கை அரசாங்கம் அமைதியாக இருந்தால், தமிழகத்தின் அழுத்தங்களை இலங்கை நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.
தமிழகத்தையும் இந்திய மத்திய அரசாங்கத்தையும் ஒப்பிடும் போது, நாய் வாலாட்டுவதற்கு பதிலாக நாயை வால் ஆட்டுவிக்கின்றது என்றார்.
அந்தளவிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சு இலங்கையில் சிங்கள பெளத்த இனவாதிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.