சாலையில் வாகனம் நிறுத்திய ஓட்டுநரிடம் அபராதம் வசூலித்த குடியிருப்புவாசிகள்!

clamp area

சிங்கப்பூரில் வாகனத்தை நிறுத்துவதற்கான இடம் வசதியாகவும் இலவசமாகவும் கிடைப்பதாக நீங்கள் நினைத்தால், அந்த இடத்தில் காரை நிறுத்துவதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. ஏனெனில் சிங்கப்பூரில் உள்ள சில சாலைகள் தனியார் சாலைகளாக உள்ளன. இதற்கு உதாரணமாக கிளமெண்டியில் உள்ள ஜாலான் மாஸ் புத்தேவை கூறலாம்.

அண்மையில் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்று, திரும்பி வந்து பார்க்கையில் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களால் வாகனத்தை எங்கும் நகரவிடாமல் அதற்கு பூட்டு போடப்பட்டிருந்தது. பின்பு அந்த வாகனத்துக்கு அவரிடமிருந்து $500 வசூலித்த பின்னர்தான் வாகனம் விடுவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் போக்குவரத்து கட்டமைப்பை நிர்வகிக்கும் நிலப்போக்கு வரவு ஆணையம், தனியார் நிலம் குறித்தான பிரச்சினைகளை நியாயப்படுத்த முடியாது என்று கூறியது. எப்படி தனியார் சாலைகள் முக்கிய சாலைகளின் கட்டமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதே தனது அக்கறை என்றும் அது தெரிவித்துள்ளது.

 

Leave a Reply