செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து என்டீவர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் நாசா மையம் ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ‘தி மார்ஸ் ஒன் பிராஜக்ட்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்குபவர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாது என ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளது. இத்திட்டம் வருகிற 2022–ம் ஆண்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களிடம் அதற்கான விண்ணப்ப கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பையொட்டி 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்தில் தங்க விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் முதன் முறையாக 4 பேர் மட்டுமே அனுப்பபட உள்ளனர். அவர்களில் 2 பேர் ஆண்கள் 2 பேர் பெண்கள் 2022–ம் அண்டு செப்டம்பரில் இருந்து புறப்படும் இவர்கள் 2023–ம் ஆண்டு ஏப்ரலில் அதாவது 7 மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைவர்.
செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்பும் நபர்களிடம் கட்டணமாக தலா ரூ. 36 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட உள்ளது. இந்த தகவலை தி மார்ஸ் ஓன் புராஜக்ட் தலைமை அதிகாரி பால் லேனல் டிரப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது பூமியில் இருந்து செல்பவர்கள் தலா 5, 511 பவுண்டு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே பூமியில் இருந்து செல்லும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்வது மிகவும் கடினம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மனிதர்கள் வரும்போதும் அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.