கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்!

Canadaaircanadian_comm_center_eastblock

கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதனை குறைக்கும் பொருட்டு விசா விதிமுறைகளை கனடாஅரசு கடினமாக்கியுள்ளது.

கனடாவில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள்:

1. புதிய விசா விண்ணப்ப படிவங்களுக்கு திருப்பிக் கிடைக்காத வகையில் புதிய கட்டண விகிதங்கள் போடப்பட்டுள்ளன.

2. புதிய ஊழியர் தேவை என்றால், முதலில் உள்ளூர் பத்திரிகைகளில் மூன்று மாதங்களுக்கு முன்னால் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு அளிக்கப்படவேண்டும்.

3. இதுமட்டுமில்லாமல், நிறுவனதாரர்கள் குறைந்தது இரண்டு முறைகளிலாவது இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிரூபிக்க வேண்டும்.

4. ஆங்கிலமும், பிரெஞ்ச் மொழியும் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும்.

இது இல்லாமல் யாரேனும் தெரிவு செய்யப்பட்டால், அதற்கு வலுவான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

கனடா நாட்டவர்களுக்கு அளிக்கப்படும் சராசரி ஊதியத்தைவிட 15 சதவிகிதம் குறைவாகக் கொடுப்பதன் மூலம் ஒரு வெளிநாட்டவரை இங்கு பணியில் அமர்த்தலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply