திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கை அகற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்!

IMG0187A

IMG0174A

திருச்சி அரியமங்கலம் திடீர்நகர் அருகில் மாநராட்சிக்கு சொந்தமானக் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மேற்படி குப்பைக் கிடங்கில்தான் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடிப் தீ பற்றி எரிவதால்  சுற்றுச்சூழலுக்கும், சுற்றுப்புறத்தில் வசிக்கக்கூடிய பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதிலிருந்து வெளிப்படும் நச்சு புகையால் குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் சுவாசக் கோளாறும், உடல் உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது.

Recyclebin

பொது மக்களின் சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் பல முறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இந்நிலையில் அரியமங்கலம் குப்பைக் கிடங்கை போர்கால அடிப்படையில் அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களின் ஆதரவுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் இன்று (21.08.2013) காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைப்பெற்றது.

Leave a Reply