இலங்கை யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள்!

pak.terroristsஇந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தானிய லக்சர் இ தொய்பா இயக்கத்தின் 8 பேர் பயிற்சிப்பெறுவதாக வெளியான தகவலை அடுத்து தமிழக கரையோர பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கரையோர மாவட்டங்களின் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரையோர பிரதேசத்தில் ஒரு பெரிய கப்பல், இரண்டு சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மதுரை உட்பட்ட சில இடங்களில் தாக்குதல் நடத்தும் நோக்கில்,  இலங்கை, யாழ்ப்பாணத்தில் 8 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பயிற்சிப்பெறுவதாக, மத்திய புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்தமையை அடுத்தே, இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் இந்திய புலனாய்வுப்பிரிவின் இந்த குற்றச்சாட்டை இலங்கையின் பாதுகாப்பு தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.

 

Leave a Reply