‌பெண் ‌புகைப்பட நிருபரை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது!

_mumbaigangrape_accusedமும்பையில் பரேல்- சக்தி மில் பகுதியில் 22 வயதுடைய ‌பெண் ‌புகைப்பட நிருபரை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் சக்தி மில்ஸ் பகுதியில் பத்திரிகை நிருபரை பாலியல் பலாத்காரம் செய்து, அவருடன் இருந்த ஆண் பணியாளரை தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண் நிருபரும், அவருடன் இருந்தவரும் அளித்த தகவல்களை வைத்து, குற்றவாளிகளின் வரைபடத்தை தயாரித்த காவல்துறையினர், விரைந்து நடவடிக்கை எடுத்து 5 குற்றவாளிகளையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply