தங்கக் கடத்தலில் இந்தியா முதலிடம்!

Goldஉலக அளவில் அதிக அளவிலான தங்கம் இந்தியாவிற்கு கடத்தப்படுவதாக உலக கடத்தல் கண்காணிப்பகத்தின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில், சென்னை விமான நிலையம் வழியாக அதிக அளவிலான கடத்தல் சம்பவங்கள் பதிவாகிவருகின்றன. நேற்று 23.08.2013 மட்டுமே 12 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த எட்டு மாதங்களில் 105 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தங்க கடத்தல் தொடர்பாக ஆண்டுதோறும் 40 வழக்குகள் சென்னை விமான நிலையத்தில் பதிவு செய்யப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கத்தில் 30 சதவீதம் சிங்கபூரில் இருந்து கடத்திவரப்பட்டுள்ளதாக சுங்க இலாக்கா துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 20 சதவீத கடத்தல் தங்கம் அரபு நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது. 50 சதவீத கடத்தல் தங்க கட்டிகள் அண்டை நாடான இலங்கையிலிருந்து கடத்திவரப்படுகிறது.

இறக்குமதி வரி 2 சதவீதத்திலிருந்து குறுகிய கால கட்டத்தில் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டதே தங்க கடத்தல் அதிகரித்துள்ளதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், தங்க விலை உயர்வும் இன்னோறு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

சவாலாக இருக்கும், இந்த கடத்தல்களை கட்டுபடுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மத்திய சுங்கத்துறை, குடியுறிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply