இளையராஜாவின் இசைநிகழ்வுக்காக இளையராஜா தனது குழுவினருடன் லண்டன் வந்து சேர்ந்துள்ளார். இக்குழுவினருடன் நடிகர் கமலஹாசனும் லண்டன் வந்துள்ளார்.
இவ்நிகழ்வு தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பொன்று Lyca-Mobile நிறுவன தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இப்பத்திரிகையாளர் சந்திப்பில் Lyca-Mobile நிறுவன தலைவர் சுபாஸ்கரன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இசை நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்க கூடாது என்று தமிழன ஆதரவாளர்கள் பலர் வேண்டுகோளும், எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போது இசை நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.