சென்னை பல்லவன் சாலையை சேர்ந்த, சக்திவேல்,30. இவரது மனைவி கலா, 27, மற்றும் நான்கு குழந்தைகளுடன் கடந்த 26.01.2013 அன்று, ராமேஸ்வரத்திற்கு வந்து தனியார் லாட்ஜில் தங்கினர். அன்று இரவு, சக்திவேல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி குழந்தைகளுடன் தலைமறைவாகினார். லாட்ஜில் தவறான முகவரி இருந்ததால், கடந்த ஏழு மாதமாக கொலை குறித்து தகவல் கிடைக்காமல், கோயில் போலீசார் திணறினர். நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் நின்ற கலாவை, போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராமேஸ்வரம் லாட்ஜில் தங்கிய போது, இங்கு வேலை செய்த சந்திரபாண்டி, 27, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின், காதலாக மலர்ந்து, ராமேஸ்வரத்திற்கு தனியாக பலமுறை வந்து, இருவரும் உல்லாசமாக இருந்தோம். இதை தெரிந்த கணவர், கண்டித்ததால், அவரை கொல்ல திட்டமிட்டு, 26.01.2013-ல் குடும்பத்துடன் ராமேஸ்வரம் வந்து, கள்ளகாதலன் வேலை செய்த லாட்ஜில் தங்கினோம். அன்று இரவு, பிராந்தியில் மயக்க மாத்திரை கொடுத்து, கணவனை தூங்க வைத்துவிட்டு, உல்லாசமாக இருந்த போது, திடீரென எழுந்த சக்திவேல், சத்தம் போட்டார். நானும் சந்திரபாண்டியும் சேர்ந்து எனது கணவரின் முகத்தில் தலையனை அமுக்கி கொலை செய்தோம். பின், ரூம் கதவை பூட்டி விட்டு தப்பினேன்.
கடந்த இரு மாதத்திற்கு முன்பு, வீட்டில் இருந்த ரூ.1.25 லட்சத்தை, கணவன் எடுத்துகொண்டு ஓடி விட்டதாக, சென்னை பல்லாவரம் போலீசில், புகார் கொடுத்தேன். சென்னை போலீசார் விசாரணையில், சிக்கி விட கூடாது என்பதற்காக, ராமேஸ்வரம் வந்து, லாட்ஜ் ஊழியரை பார்த்தபோது, போலீசாருக்கு தகவல் கிடைத்தது, என்றார். ராமேஸ்வரம் கோயில் போலீசார் கலா, சந்திரபாண்டியை கைது செய்தனர்.