சோனியா பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டும்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

 Sonia-Gandhi_Admitted1

Sonia-Gandhi_Admittedஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது, அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 26.08.2013 திங்கள் இரவு ஒரு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அவரது மகன் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் குமார் செல்ஜா ஆகியோரும் உடன் சென்றனர்.

modiஇது குறித்து இன்று தனது டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஐ.மு. கூட்டணித் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனைக்கு நவீன ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் தயாராக ஆம்புலன்ஸ்கள் வைக்கப்பட வேண்டும், மேலும், சக்கர நாற்காலிகள், முதலுதவி படுக்கைகள் ஆகியவையும் நாடாளுமன்ற வளாகத்தில் அவசரத் தேவைக்காக வைக்கப்பட வேண்டும். மருத்துவர்கள்தான் உடல்நிலை குறித்து சரியாகக் கணிக்க முடியும், சோனியா பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டும், அவரது உடல் நிலை நன்றாக இருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

  Tweets All / No replies

 1.   Narendra Modi@narendramodi9h

 Considering her health, Sonia ji should have been taken to hospital in a well-equipped ambulance. Still, doctors are best judges.

 Expand

 2.   Narendra Modi@narendramodi9h

 Concerned that basic medical emergency procedures were not used. Would have been better if wheelchair or stretcher were used in Parliament.

 Expand

 3.   Narendra Modi@narendramodi9h

 Glad to know that Sonia ji’s health is fine. Wishing her the best of health for the future.

Leave a Reply