எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்த கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் முன்னால் கண்ணீர் மல்க கதறியழுதனர். இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் கேப்பாபிலவு உள்ளிட்ட பகுதிகளுக்கு 27.08.2013 பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணிவரை சென்றிருந்த ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது காணாமல் போனவர்களது பிரச்சினை மற்றும் நில பறிப்பு தொடர்பில் மக்கள் எடுத்துக்கூறினர். முள்ளிவாய்க்கால் சந்திப்பில் தங்கள் உறவுகளின் புகைப்படங்களுடன் அமையாருக்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கதறியழுது எங்கள் பிள்ளைகள் உறவுகள் மீளவும் எமக்கு வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன் எங்கள் பிள்ளைகளை கொன்றுவிட்டார்களா? கொன்றால் இந்த கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள். |
கூச்சலிட்ட நிலையில் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கும் மேலதிகமாக எடுத்துக் கொண்ட அம்மையார் அனைவரினதும் பிரச்சினைகளை மிகவும் உன்னிப்பாக கேட்டிறிந்து கொண்டார். இதேபோன்று மாத்தளன் கேப்பாபிலவு போன்ற பகுதிகளிலும் மக்கள் கண்ணீருடன் அம்மையாருக்கு முன்னால் நின்றனர். கேப்பாபிலவு மக்கள் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் எங்களை எங்கள் மண்ணில் வாழ விடுங்கள் சொந்த இடத்தில் 3தொடக்கம் 12ஏக்கர் நிலம் இருக்க, கால் ஏக்கர் நிலத்தில் பிச்சை எடுக்கிறோம் என கண்ணீருடன் கூறியுள்ளனர். இந்நிலையில் அனைத்து விடயங்களையும் கண்ணுற்றுச் செல்வதாக அம்மையார் மக்களிடம் கூறியுள்ள அம்மையார் கேட்டும் பார்த்தும் அறிந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவேன் எனவும் கூறியுள்ளார். |
|