மரபணு கோளாறு: முதியவரைப் போன்று குழந்தைகள்!

child

child.jpg1child.jpg1.jpg2பீகாரைச் சேர்ந்தவர் நபி ஹுசைன் கான்(50). அவரது மனைவி ரசியா(46). உறவினர்களான இவர்களுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக பிறந்தன. அவர்களது மகன் அலி ஹுசைன் கான்(14) அரிய வகை நோயால் அவதிப்படுகிறார். இந்த நோயினால் அவரது உடல் வழக்கத்தை விட 8 மடங்கு அதிகமாக வயதாகுகிறது. இதே நோயால் அவரது உடன் பிறப்புகள் 5 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரோஜெரியா சின்ட்ரோம் (progeria syndrome) ஒரு அரிய வகை மரபணு கோளாறு ஆகும். 8 மில்லியன் குழந்தைகளில் ஒருவரைத் தாக்கும் “ப்ரோஜெரியா சின்ட்ரோம்’ (progeria syndrome) மிக வேகமாக அக்குழந்தையை மூப்படையச் செய்து, 12-13 வயதிற்குள் அக்குழந்தையை மரணமடையச் செய்துவிடும். இந்த நோயை குணப்படுத்த இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply