தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பிரகாஷ் காரத் சந்திப்பு!

pr300813aமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

சுமார் 20 நிமிடம் இந்த ஆலோசனை நடந்தது. மரியாதை நிமித்தமாக பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியதாக தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த பிரகாஷ் காரத் நிருபர்களிடம் கூறுகையில், “பல்வேறு பிரச்சினைகளில் அ.தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படும்.

தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வராது” என்றார். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலின்போது, இடதுசாரி வேட்பாளர் டி.ராஜாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை வந்துள்ள பிரகாஷ் காரத், இன்று மாலையில் நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

 

Leave a Reply