மலேசிய உள்துறை அமைச்சகம் மூன்று நாட்களுக்கு முன்பு அங்குள்ள 49 குண்டர் கும்பல்களைப் பற்றியும் அந்தக் கும்பல்களில் பதிவு செய்து கொண்டுள்ள உறுப்பினர்களைப் பற்றியும் அறிவித்துள்ளது. பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய அந்த குண்டர் கும்பல்களில் 40,313 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அந்த 40,313 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றும் குண்டர் கும்பல்களில் 28,926 மலேசிய இந்தியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் மலேசிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்நிலையில் குண்டர் கும்பல் மொத்த உறுப்பினர்களில் அநேகமாக மூன்றில் இரண்டு பங்கினர் இந்தியர்களாக இருக்கலாம் என்று மலேசிய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.