உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பாண்டவர் முதலாவது பிரான்ஸிஸ் இலங்கைக்கு இப்போதைக்கு வரமாட்டார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
போப்பாண்டவர் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அவர் இலங்கைக்கு இந்த வருடம் விஜயம் செய்ய மாட்டார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்து, போப்பாண்டவர் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டிருந்தார்.
போப்பாண்டவருக்கு அதிகளவான இறைப்பணிகள் இருப்பதாகவும் மேலும் சில நாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவைகள் இருப்பதாலும் திட்டமிட்டப்படி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் திருச்சபை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் அடுத்த வருடம் அதாவது 2015 ஆம் ஆண்டின் நடுபகுதியில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.