இலங்கையில் தனி ஈழம் என்ற தனிநாடு உருவாக வாய்ப்பில்லை எனவும், இலங்கையில் தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க தமிழ் நாட்டு தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும், பயங்கரவாதத்தை ஆதரித்த இந்திய அரசியல்வாதிகள் உட்பட இந்தியாவில் உள்ளவர்கள் தற்போது முதலை கண்ணீர் வடித்து வருகின்றனர் என்றும், இந்திய கடும் போக்கு தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர் சுப்ரமணியன் சுவாமி கொழும்பில் நடைபெறும் இராணுவ கருத்தரங்கில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுப்ரமணியன்சுவாமி 05.09.2013 அன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.