சிரியா இராசயன ஆயுதங்களின் பாவணையை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்க – ரஷ்யா திட்டம் உண்மையில் சிரியா அரசுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி என சிரியா அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னமும் ஒரு வாரத்திற்குள் சிரியா தன்னிடம் உள்ள அனைத்து இராசயன ஆயுதங்கள் தொடர்பிலும் தகவல்களை ஒப்படைக்க வேண்டும். அடுத்த வருட நடுப்பகுதிக்குள் அவற்றை இயங்கு நிலையிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும் என அமெரிக்க – ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தின் படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை சிரியா மீறும் பட்சத்தில் எந்த நேரமும் சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அதே போன்று ஐ.நாவின் பாதுகாப்பு சபையும் இது தொடர்பில் சிரியாவுக்கு எச்சரித்துள்ளது. இந்நிலையில் இக்கூட்டுத்தீர்மானத்தை வரவேற்றுள்ள சிரியா அரசு இராசயன ஆயுதப் பாவணையை கட்டுப்படுத்தும் சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திடுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.அதோடு சிரியா அரசால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒப்பந்தம் ஒன்றை போடுவதற்கு காரணமாக இருந்த தமது நட்பு நாடான ரஷ்யாவுக்கும் நன்றி சொல்லிக் கொள்வதாக கூறியுள்ளது.