சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்துடன் 1905 முதல் வரலாற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கும் மலாயா பல்கலைக்கழகத்துக்கு, சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் நேற்று (19.09.2013) வருகை புரிந்தார். டாக்டர் டான் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புரவலர் என்பது குறிப்பிடத்தக்கது.
1959-ல் மலாயா பல்கலைக் கழகம் இரண்டு வளாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒரு வளாகம் கோலாலம்பூரிலும் இன்னொரு வளாகம் சிங்கப்பூரிலும் நிறுவப்பட்டது. சிங்கப்பூர் வளாகம் பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகமானது.
இன்றும் ஆண்டு தோறும் நிறைய சிங்கப்பூர் மாணவர்கள் மலாயா பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றனர். பரிமாற்றத் திட்டத்திலும் கலந்து கொள்கின்றனர்.
2010-ல் இரண்டு பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த 16 கட்டடவியல் மாணவர்கள் ஒரு மாதப் பரிமாற்றத் திட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போது 121 சிங்கப்பூர் மாணவர்கள் மலாயா பல்கலைக் கழகத்தில் பயில்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் மலாய் மொழி, இஸ்லாமியக் கல்விப் பிரிவில் உள்ளனர்.