வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 944 பிரவுசிங் சென்டர்களுடன் தேர்தல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பெயரை சேர்க்கவோ, முகவரியை மாற்றம் செய்யவோ பிரவுசிங் சென்டர்களில் சென்று மாற்றம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
மேலும், ஏற்காடு இடைத் தேர்தலை வரும் அக்.16-ந் தேதிக்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.