மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கை விசாரித்து வந்த ராஞ்சி சிபிஐ நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ் மற்றும் 7 அரசியல் தலைவர்கள் மற்றும் 4 உயர் அதிகாரிகள் உட்பட 45 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, லாலு பிரசாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.