இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று (08.10.2013) பிற்பகல் விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய வீட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட இரு வீடுகளை அதன் உரிமையாளரிடம் கையளித்தார்.
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தந்தை செல்வாபுரம் பகுதியில் இந்திய நிதியுதவியில் 161 வீடுகள் நிர்மாணிக்கப்படுகிறது. அதில் 44 வீடுகள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. எனினும், இரு வீடுகளே முழுமையாக பூர்த்தி ஆகியுள்ளன.
இந்நிகழ்வில் வட மாகாணத்திற்கான இந்திய பிரதித்தூதுவர் வெ. மகாலிங்கம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன், வலி. வடக்கு பிரதேச செயலாளர் எஸ். ஸ்ரீமோகன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகள் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.