ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட வரும் வியாழக்கிழமை (நவ. 14) மனு தாக்கல் செய்யலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மொஹரம் தினத்தையொட்டி வியாழக்கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு தலைமை ஹாஜியின் தகவலையடுத்து, மொஹரம் விடுமுறை தேதி நவம்பர் 15-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு விடுமுறை காரணமாக, அன்றைய தினத்தில் ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, நவம்பர் 14 வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 16- ஆம் தேதி கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.