கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்து கொள்ள மாட்டார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: காமன்வெல்த் மாநாட்டில், இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பங்கேற்கமாட்டார். இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உள்பட இந்தியாவிலிருந்து யாருமே கலந்து கொள்ளக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது என்றார் சம்பந்தன்.