காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.
மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் பிபிசி செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.
ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று பிபிசி செய்தியாளர் ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.