சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட 12 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கட்சிகளின் சார்பில், அ.தி.மு.க.வில் இருந்து சரோஜாவும், தி.மு.க.வில் இருந்து மாறனும் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 10 மனுக்களும் சுயேட்சைகள்.
மொத்தம் 27 வேட்பாளர்கள் சார்பில் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 12 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ளவை தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெற வரும் 20-ம் தேதி மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும், அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தேர்தல் அதிகாரி சபாபதி கூறினார்.