பொதுநலவாய தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு உறவுக்காரர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வந்திருக்கலாம். அரசியல் நெருக்கடிகள் காரணமாகவே அவர் வருகை தரவில்லை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். இறுதி நேரத்திலேயே இந்த முடிவினை அவர் எடுத்துள்ளார். அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
நானாக இருந்தால் கூட இத்தகைய முடிவினையே எடுத்திருப்பேன். தனது முடிவு குறித்து இந்தியப் பிரதமர் எனக்கு அறிவித்திருந்தார். இருந்த போதிலும், உறவுக்காரர் வந்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நேற்று (19.11.2013) அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருக்கமாக தெரிவித்துள்ளார்.