பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன : கர்நாடக அரசு நடவடிக்கை!

atmbfatmb1atmb2

atmb4atmb3

atmbatmbs

பெங்களூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்த வங்கி பெண் அதிகாரியை மர்ம மனிதன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்து சென்றான். தலையில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்ததால், அந்த பெண்ணின் ஒரு பக்க உடல் உறுப்புகள் செயல் இழந்து விட்டன. அவரை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவம் நடந்த ஏ.டி.எம்.மில் காவலாளி நியமிக்கப்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்த கர்நாடக  அரசு, காவலாளி இல்லாத ஏ.டி.எம்.கள் பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அப்போது பெங்களூரில் சுமார் 2580 ஏ.டி.எம்.கள் இருப்பதும், அவற்றில் 680 ஏ.டி.எம்.களில் காவலாளி இல்லை என்பதும் தெரிய வந்தது. மாநிலம் முழுவதும் இதுபோல நூற்றுக்கணக்கான ஏ.டி.எம்.கள் பாதுகாவலர்கள் இல்லாமல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம்.களை உடனே மூட வங்கிகளுக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று (21.11.2013) பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன. சில வங்கிகள் பாதுகாவலர் இல்லாத ஏ.டி.எம்.களை இன்னும் மூடவில்லை.

ka.home ministerபாதுகாவலர்கள் இல்லாத ஏ.டி.எம்.களை மூட 3 நாட்கள் கெடு விதித்துள்ளோம். பாதுகாவலர் நியமிக்கப்படாவிட்டால் ஏ.டி.எம்.களை நிரந்தரமாக மூட அறிவுறுத்தியுள்ளோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.