கிழக்கு சீனாவின் கடல் எல்லைக்கு மேலே எந்த நாட்டின் விமானங்களும் பறக்க கூடாது. அவ்வாறு பறக்க நேரிட்டால் எங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும். என சமீபத்தில் சீனா எச்சரிக்கை செய்து தடை அறிவிப்பு வெளியிட்டது. கொரியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட வான்எல்லை வழியாக 2 போர் விமானங்களை அமெரிக்க பறக்க வைத்துள்ளது.
சீனாவுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் பி.52 எனப்படும் 2 குண்டுவீச்சு போர் விமானங்கள் சீன ரேடார்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வெற்றிகரமாக பறந்து பத்திரமாக திரும்பி வந்துள்ளன.
இது தொடர்பாக கருத்து கூறிய அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்கன் செய்தி தொடர்பாளர் ‘குவாமில் இருந்து ஓர் போர் விமானம் புறப்படும் அதே வேளையில் இன்னொரு போர் விமானம் குவாமை வந்தடையும் வண்ணம் ஒத்திகை பார்க்க நாங்கள் நீண்ட நாட்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தோம். 26.11.2013 இரவு அந்த ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்று கூறியுள்ளார்.