சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர். இதன்போது 30 -ற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும், தாக்குதல் நடத்திய நபர்களைத் தடுக்கவோ, கைது செய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற சிலர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.