இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாரடைப்பு : மருத்துவமனையில் அனுமதி!

ilayaraja

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தபோது, இன்று (23.12.2013) அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவருக்கு மிதமான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 70 வயதான இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல ஆயிரம் திரைப்படப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 28 ஆம் தேதி, மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஒரு கலை நிகழ்ச்சியில் இளையராஜா பங்குபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.