இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயற்சித்தார் ஒபாமா : இலங்கை அமைச்சர் தகவல்!

 

அமைச்சர் டியூ குணசேகர

அமைச்சர் டியூ குணசேகர

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அச்சுறுத்தலுக்கு கூட சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அஞ்சமாட்டார் என அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இந்த கருத்தினை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,

prabakaranThe body of LTTE leader Prabhakaran is carried on a stretcher by Sri Lankan soldiers at Nanthikadal lagoonஇலங்கைக்கு சர்வதேச ரீதியில் சவால்கள் இருக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே மாத இறுதி வாரம் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் போர்முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.  19 ஆம் திகதி அனைவரும் வெளியில் கொண்டுவரப்பட்டனர்.  இதன்போது நான் அறிந்த சில விடயங்களைக் கூறவேண்டும். ஏனெனில் அந்தச் சந்தர்ப்பங்களில் இவற்றைக் கூறவில்லை. தற்போது அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூறவேண்டும்.

வரலாற்றில் இவை அறிக்கைப்படுத்தப்பட வேண்டும். அப்போது இருந்த நிலைமை என்ன? அந்த இறுதி ஐந்து  தினங்களில் என்ன நடந்து என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,  சிறிலங்கா ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார். இல்லையேல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவோம் எனக் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் போரை நிறுத்துமாறு தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கூறினார். கனேடியப் பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோரும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு கூறினர்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது. 2009ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரை அமைச்சரவை கூடிப் பேச்சு நடத்தியது. அன்று காலை சிறிலங்கா ஜனாதிபதி ஜோர்தான் நாட்டுக்குச் சென்றிருந்தார். நான் வரும்வரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுடன் இதைத் தொடருங்கள். எவருக்கும் அடிபணிய இடமளிக்க வேண்டாம் என்று கூறினார்.

இதுதான் எமது நாட்டின் தீர்மானம் மிக்க தருணம். அந்தச் சமயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தீர்மானம் எடுத்தார் என நான் நினைக்கிறேன். அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தமது உறுதியிலிருந்து தளர்ந்திருந்தால், அமெரிக்கர்கள் வந்து பிரபாகரனை மீட்க்கொண்டு சென்றிருப்பார்கள். அவ்வாறான நிலை ஏற்பட இடமளிக்கப்படவில்லை. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அன்று போரை முடிவுக்குக் கொண்டுவந்ததே இன்று சர்வதேச நாடுகள் எம்மை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பிரதான காரணமாக உள்ளது. அதைவிடுத்து, தமிழ் மக்கள் மீது உள்ள அக்கறையில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.