இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குளத்தின் வான்கதவு 16.01.2014 வியாழக்கிழமை திறக்கபட்டதன் காரணமாக ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புருட்டுமான் ஓடை, பள்ளக்காடு, வண்ணாத்தியாறு மற்றும் மாவடி ஓடை ஆகிய பிரதேசங்களில் வெள்ளநீர் பெருகியுள்ளது. அத்தோடு மாவடி ஓடை பாலமும் வெள்ளநீரால் உடைக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்கும் பணியில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, தொப்பிகலை இராணுவத்தினர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள் இணைந்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.