கை விரலை கடித்த கடல்சிங்கம்!

கடற்சிங்கம்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் உள்ள ஆண் கடல்சிங்கம் ஒன்று தனக்கு உணவளித்த பொறுப்பாளரின் விரலை உணவு என்று தவறாக நினைத்து காயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அந்த விலங்கியல் பொறுப்பாளரின் பெயர் காயத்ரி என்று அறியப்படுகிறது. கடல்சிங்கத்துக்கு வழக்கமான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு இருந்தார் பொறுப்பாளர்.

அப்போது அவரின் இடது கை மோதிர விரல் நுனியை உணவு என்று நினைத்து கடல்சிங்கம் கடித்துவிட்டது. பிறகு அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் காயம்பட்ட இடத்தில் கட்டுப்போட்டு, அதில் ஐஸ் கட்டி வைத்ததாக சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் மனிதவள இயக்குநர் ஜீன் டான் கூறினார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்த பொறுப்பாளர், சிகிச்சை முடிந்து மறுநாள் திரும்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.