திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம், அரியமங்கலம் ஜெகநாதபுரம் மண்ணெண்ய் கிடங்கிற்கு மண்ணெண்ய் வாங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு சென்ற திருச்சி மாவட்டம், திருச்சி வட்டம், அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விதவைகள் மற்றும் வயதான முதியோர்களின் குடும்ப அட்டைகளை திருச்சி உணவு பொருள் வழங்கல் வட்டாட்சியர் மற்றும் அரியமங்கலம் பகுதி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு, கடந்த ஆறுமாதக் காலமாக எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமலும், குடும்ப அட்டைகளை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்காமலும் பணத்திற்காக பேரம் பேசி வருவதாக தெரிகிறது.
குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்பட்டதால் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுகளைகூட அவர்களால் வாங்க முடியவில்லை. வயதான முதியோர்கள் மற்றும் விதவைகள் கடந்த ஆறுமாதங்களாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்த வண்ணம் உள்ளனர். ஆனால், (05.02.2014) இன்று வரை குடும்ப அட்டை உரியவர்களுக்கு திருப்பி கொடுக்கப்படவில்லை.
லட்சக்கணக்கானோர் போலி குடும்ப அட்டைகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வசதிப்படைத்த ஆயிரக்கணக்கானோர் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக விதவைகள் மற்றும் முதியோர் உதவிதொகை பெற்று வருகின்றனர்.
உதாரணமாக திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வேம்பனூர் ஊராட்சி, வண்ணாரப்பட்டி கிராமத்தில் 100 ஏக்ருக்கு மேல் சொந்த நிலங்கள், சொந்தமாக வீடு வைத்துள்ள, சொந்த தொழில் மூலம் மாதம் 2 லட்சத்திற்கு மேல் குடும்ப வருமானம் உள்ள ஒரு பெரியவர், தன்னை ஒரு ஆதரவற்ற அனாதை என்று சொல்லி பல ஆண்டுகளாக முதியோர் உதவி தொகை பெற்று வருகிறார். அவரிடம் குடும்ப அட்டையும் உள்ளது முடிந்தால் ரத்து செய்யுங்கள் பார்க்கலாம்.
இதுப்போன்ற நபர்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், அன்றாடம் சாப்பாட்டிற்கே அல்லாடும் இதுபோன்ற அப்பாவி விதைவைகளையும், முதியோர்களையும் வதைப்பது எந்த வகையில் நியாயம்? அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் அரசுக்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது.
குடும்ப அட்டைகளை பறிக்கொடுத்த விதவைகள் மற்றும் வயதான முதியோர்கள் ஒரு சிலரின் விபரம்:
1.விக்டேரியா மேரி / சின்னப்பன்
10/3, அற்புதசாமிபுரம்,
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
2.ஜோனப்பார்க் / வின்சென்ட்
10/1-21,அந்தோணியார் கோவில் தெரு
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
3.எலிசபெத்ராணி / ஜோசப்
3/67-A , அற்புதசாமிபுரம்,
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
4.அண்ணமாணிக்கம்/மைக்கேல்
10/2/63,பு.எண்:67, அடைக்கலமாதாகோவில்தெரு,
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
5.குழந்தைதெரசம்மாள் /சவேரியார்
62 , அடைக்கலமாதாகோவில்தெரு
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
6.யாசோதை/மாவடியான்
அற்புதசாமிபுரம்,
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
7.செபஸ்தியம்மாள்/பால்ராஜ்
அடைக்கலமாதாகோவில்தெரு
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
8.இருதயமேரி /அந்தோணிமுத்து
அடைக்கலமாதாகோவில்தெரு
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
9.மேரி/அந்தோணிசாமி
அடைக்கலமாதாகோவில்தெரு
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
10. பேபி /குழந்தைவேல்
193,பெருமாள் கோவில்தெரு,
அக்ரஹாரம்.
அரியமங்கலம் கிராமம்,
திருச்சி-620010.
-கே.பி.சுகுமார்