தமிழ்நாடு பொறியியல் கல்லூரிக்களுக்கிடையேயான 32-வது விளையாட்டு போட்டிகள் துவக்க விழா : தடகள வீராங்கனை பத்மஸ்ரீ P.T. உஷா கலந்துக் கொண்டார்

dig.JPG1p.t.ushadigதமிழ்நாடு பொறியியல் கல்லூரிக்களுக்கிடையேயான 32-வது விளையாட்டு போட்டிகள் துவக்க விழா 10.02.2014 மாலை திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டம், கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

dig ramasubramaniyanதுவக்கவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மண்டல காவல்துறை தலைவர், முனைவர்.M.இராமசுப்ரமணி I.P.S., மற்றும் அர்சுனா விருது பெற்ற ஒலிம்பிக் தங்க மங்கை தடகள வீராங்கனை பத்மஸ்ரீ P.T. உஷா ஆகியோர் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தமிழ்நாடு அளவில் 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு விருந்தினர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

இந்திய இளைஞர்களிடம் அதிக அளவில் திறமைகள் உள்ளன. அவற்றை சரியான அளவில் வழிநடத்தினால் இந்தியா விளையாட்டுதுறையில் சிறப்பான இடத்தை அடையும் என்று திருச்சி மண்டல காவல்துறை தலைவர் முனைவர்.M.இராமசுப்ரமணி I.P.S., கூறினார்.

p.t.usha.JPG1விளையாட்டு துறையில் இன்று இருக்கும் வசதிகள் அன்று எனக்கு கிடைக்கவில்லை. எனவே, இந்த சிறப்பான வாய்ப்பினை இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் பயன்படுத்தி சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்சுனா விருது பெற்ற ஒலிம்பிக் தங்க மங்கை தடகள வீராங்கனை பத்மஸ்ரீ P.T. உஷா கூறினார்.

இவ்விழாவிற்கு கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.எஸ்.கே. ஆர்.பெரியசாமி தலைமை பொறுப்பேற்று நடத்தினார். கல்விநிறுவனங்களின் செயலாளர் பி.எஸ்.கே மு.தங்கவேல், பொருளாளர் பி.எஸ்.கே S.தென்னரசு, துணைத்தலைவர் பி.எஸ்.கே P.அருண்குமார், மற்றும் இணைச்செயலாளர் பி.எஸ்.கே P.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொறியியல் கல்லூரியின் முதல்வர், முனைவர் அசோகன், (தலைவர் TIES) வரவேற்புரை நிகழ்த்தினார்.  பொறியியல் கல்லூரி விளையாட்டுதுறை பேராசிரியர் பழனிவேல் நன்றியுரை வழங்கினார்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற பல்வேறு கல்லூரிகளுக்கிடையான இவ்விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 26-ந்தேதி வரை இங்கு நடைப்பெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

-பி.மோகன்ராஜ்